அண்ணாமலையின் எட்டுத்திக்கிலும் அஷ்டலிங்கங்கள் | தி.மலை தீபத் திருவிழா சிறப்பு

மலையே மகேசன் என அழைக்கப்படும் அண்ணாமலை யானது கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் உள்ளது. அண்ணாமலையின் எட்டுதிக்கிலும் அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ளன.

Dec 13, 2024 - 15:50
 0  6
அண்ணாமலையின் எட்டுத்திக்கிலும் அஷ்டலிங்கங்கள் | தி.மலை தீபத் திருவிழா சிறப்பு

மலையே மகேசன் என அழைக்கப்படும் அண்ணாமலையானது கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் உள்ளது. அண்ணாமலையின் எட்டுத்திக்கிலும் அஷ்டலிங்கங்கள் அமைந்துள்ளன. கிரிவலப் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் ஆகிய கோயில்கள் உள்ளன. இக்கோயில்களை வழிபட்டால் கிடைக்கும் பலன்களை புராணங்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலையை கிரிவலம் செல்லும் பக்தர்கள் பலரும், அஷ்ட லிங்கங்களை தவறாமல் வழிபடுகின்றனர்.

இந்திர லிங்கம்: கிழக்கு திசையில் உள்ளது இந்திர லிங்கம். இதனை தேவர்களின் அரசன் என்ற அழைக்கப்படும் இந்திரன் பிரதிஷ்டை செய்துள்ளார். இதன் தொடர்புடைய கிரகங்களாக சூரியன், சுக்கிரன் உள்ளது. இந்திர லிங்கத்தை வழிபடுவதால் நீண்ட ஆயுள் மற்றும் புகழ் கிடைக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow