அன்னதான பெருமையை சிவபெருமான் உணர்த்தும் திருத்தலம் திருஅண்ணாமலை | கார்த்திகை தீபம் சிறப்பு

அன்னதான பெருமையை சிவபெருமான் உணர்த்தும் திருத்தலம் திருஅண்ணாமலை திருவண்ணாமலை எனும் ஆன்மீக  திருத்தலம், தன்னை நாடி வருவோரின் துக்கங்களை எல்லாம் போக்க வல்லது.

Dec 13, 2024 - 15:50
 0  5
அன்னதான பெருமையை சிவபெருமான் உணர்த்தும் திருத்தலம் திருஅண்ணாமலை | கார்த்திகை தீபம் சிறப்பு

திருவண்ணாமலை எனும் ஆன்மீக திருத்தலம், தன்னை நாடி வருவோரின் துக்கங்களை எல்லாம் போக்க வல்லது. இங்கு வரும் பக்தர்கள் எல்லோரும் சிவனடியாரின் சொரூபங்களாவார்கள். எனவே, இங்கு பக்தர்களுக்கு அன்னமிடுவது தானங்களில் மிகச் சிறந்த தானமாகும். இத்தலத்தில் அன்னதானம் செய்வதன் சிறப்பை சீனந்தல் சிவப்பெருவாள சித்தர் என்னும் பெயருடைய சித்தரின் அருள்வாக்கின் மூலம் சாக்ஷாத் சிவபெருமானே கூறியிருக்கிறார். அந்த அற்புத வாக்கில் ஏற்பட்ட சொற்களை பக்தகோடி பெருமக்களுக்கு வழங்குவதில் பெருமைக்கொள்கிறோம்.

சீனந்தல் சிவப்பெருவாள சித்தர் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் மானிட வடிவில் தோன்றியவர். அஷ்டமாசித்திகள் கைவரப்பெற்ற அஷ்டநாத பாவனங்களில் தலைசிறந்தவர். ஸ்தம்பனம், மோகனம், வசியம், உச்சாடனம், மாரகம், உத்வேஷணம், கல்பம், மகா உத்தி போன்ற எட்டு கல்ப சூத்திர நெறிகளின்படி அரிய மருந்துகளை தயாரித்து மக்களின் தீராத நோய்களை தீர்த்து வைத்தவர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow