‘மல்யுத்த மாவீரன்’ டெரிபிள் டெட் முகில் | வரலாறு முக்கியம் மக்களே! - 05
1877ஆம் ஆண்டில் நியூயார்க் நகரத்தின் கில்மோர் கார்டனில் பெரும் கூட்டம் கூடியது. பீட் என்கிற கரடியுடன் அதன் பயிற்சியாளர் மல்யுத்தம் செய்து காட்டினார். இதுவே மனிதனுக்கும் கரடிக்கும் நடந்த முதல் நவீன மல்யுத்தப் போட்டியாகப் பதிவாகி இருக்கிறது.

1877ஆம் ஆண்டில் நியூயார்க் நகரத்தின் கில்மோர் கார்டனில் பெரும் கூட்டம் கூடியது. பீட் என்கிற கரடியுடன் அதன் பயிற்சியாளர் மல்யுத்தம் செய்து காட்டினார். இதுவே மனிதனுக்கும் கரடிக்கும் நடந்த முதல் நவீன மல்யுத்தப் போட்டியாகப் பதிவாகி இருக்கிறது. அதற்குப் பிறகு காட்சிப் போட்டிகளிலும் சர்க்கஸ்களிலும் கரடி - மனிதன் மல்யுத்தப் போட்டிகள் ஆங்காங்கே நடந்தன. ஆனால், அவை பெரிதாகப் புகழ்பெறவில்லை.
மல்யுத்தத்தில் புகழ் பெறுவதற் காகவே நான் அவதரித்திருக்கிறேன் என்று கறுப்புக் கரடி ஒன்று 1949ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பிறந்தது. டெட் என்பது அதற்கு வைக்கப்பட்ட பெயர். ஒரு கரடியை வைத்து வித்தை காட்ட வேண்டும் என்று மனிதர்கள் முடிவு செய்துவிட்டால், முதல் காரியமாக அது குட்டியாக இருக்கும்போதே அதன் நகங்களை எடுத்து விடுவார்கள்.
What's Your Reaction?