உணவு சுற்றுலா: காவேரிப்பட்டணம் நிப்பட்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கிறது காவேரிப்பட்டணம் எனும் அழகிய கிராமம். ஊருக்கு நடுவிலே தென்பெண்ணை ஆறு பயணிக்கச் செழிப்பாக இருக்கின்றன விவசாய நிலங்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கிறது காவேரிப்பட்டணம் எனும் அழகிய கிராமம். ஊருக்கு நடுவிலே தென்பெண்ணை ஆறு பயணிக்கச் செழிப்பாக இருக்கின்றன விவசாய நிலங்கள். அருகிலிருக்கும் கிருஷ்ணகிரி நீர்த்தேக்கமோ கண்களுக்கும் மனதுக்கும் இதமளிக்கிறது.
இயற்கை எழில் கொஞ்சும் காவேரிப்பட்டணத்துக்கு நிறையவே பெருமைகள் இருக்கின்றன. கிருஷ்ணகிரிக்கு உரித்தான சுவைமிகுந்த மாம்பழங்களை வைத்துத் தயாரிக்கப்படும் மாம்பழக்கூழ் இந்தப் பகுதியில் பிரசித்தம். மல்லிகைப்பூ மனமும் காவேரிப்பட்டணத்தின் தனித்துவம். பால் சார்ந்த வேளாண்மையும் அங்கு செழிந்தோங்குவதால் பால்கோவாவும் அங்கு ஸ்பெஷல். இப்படிப் பல பெருமைகளைக் கொண்ட காவேரிப்பட்டணத்தில் கிடைக்கும் ‘நிப்பட்’ எனும் தின்பண்டமோ ஆரோக்கியத்தைப் பரிசளிக்கக் கூடியது.
What's Your Reaction?