கோட்டையை சிறப்பாக கட்டிக்கொடுத்த கான்டிராக்டருக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரம் பரிசளித்த தொழிலதிபர்
கோட்டையை சிறப்பாக கட்டிக்கொடுத்த கான்டிராக்டருக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரத்தை தொழிலதிபர் ஒருவர் பரிசாக வழங்கியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சண்டிகர்: கோட்டையை சிறப்பாக கட்டிக்கொடுத்த கான்டிராக்டருக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரத்தை தொழிலதிபர் ஒருவர் பரிசாக வழங்கியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் குர்தீப் தேவ் பத். பஞ்சாபில் இவருக்குச் சொந்தமான ஏராளமான பங்களாக்கள், வீடுகள், பண்ணை வீடுகள், எஸ்டேட்டுகள் உள்ளன. இந்நிலையில் தனது நிலத்தில் ஒரு கோட்டையைக் கட்டுவதற்கான பணிகளை, ரஜிந்தர் சிங் ரூப்ரா என்ற காண்டிராக்டரிடம் குர்தீப் தேவ் ஒப்படைத்தார் குர்தீப் தேவ். இதைத் தொடர்ந்து தன்னுடைய திறமையான தொழிலாளர்கள், தோட்டக்கலை நிபுணர்கள், கட்டிடக் கலை நிபுணர்கள் உதவியுடன் அருமையான பூங்காங்கள், கலையம்சமுடன் கூடிய கோட்டையை கட்டித் தந்துள்ளார் ரஜிந்தர் சிங்.
What's Your Reaction?