வீட்டில் தூசு படியாமல் இருக்க செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்!
வீட்டில் தூசு சேராமல் பார்த்துக் கொள்வது என்பது கடினமான வேலைகளில் ஒன்று. வீட்டின் பலவிதமான பொருட்களில் வெளிப்படையாகவும் மறைந்தும் இருக்கும் தூசு, உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய அளவுக்கு ஆபத்தானது.

வீட்டில் தூசு சேராமல் பார்த்துக் கொள்வது என்பது கடினமான வேலைகளில் ஒன்று. வீட்டின் பலவிதமான பொருட்களில் வெளிப்படையாகவும் மறைந்தும் இருக்கும் தூசு, உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய அளவுக்கு ஆபத்தானது. சரியான பராமரிப்பு முறைகளைக் கையாண்டால், வீட்டில் தூசு சேர்வதைக் கட்டுப்படுத்த முடியும். தூசு படியாமல் இருப்பதற்கான சில வழிகள் இங்கே...
வழக்கமான சுத்தப்படுத்துதல்: தூசு இல்லாமல் வீட்டைப் பராமரிக்க வேண்டுமென்றால் தினசரி எதோவொரு வகையில் சுத்தப்படுத்துவதை வழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் ஒருமுறையாவது தரையைத் துடைப்பான் வைத்துச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்குத் தண்ணீரைப் பயன்படுத்துவது நல்லது. அத்துடன், பொருட்களில் தூசுவை நீக்க ‘மைக்ரோஃபைபர்’ துணியைப் பயன்படுத்தலாம்.
What's Your Reaction?