“அனுதாபம், ‘ஹீரோ’ இமேஜ் வேண்டாம்!” - யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த பார்வை மாற்றுத் திறனாளி கதை இது!

யுபிஎஸ்சி தேர்வில், தேர்ச்சி பெற்று, தேசிய அளவில் 91-வது இடத்தைப் பெற்றார். இந்து கல்லூரியில் இளங்கலை படித்த அவர், ஜேஎன்யூ-வில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

Apr 24, 2025 - 21:15
 0  5
“அனுதாபம், ‘ஹீரோ’ இமேஜ் வேண்டாம்!” - யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த பார்வை மாற்றுத் திறனாளி கதை இது!

பார்வை மாற்றுத் திறனாளிகள் தினம் தினம் போராடிப் போராடிதான் வாழ்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு ஓர் அரசாங்க வேலை, நல்ல சம்பளம் என்பதெல்லாம் எட்டிப்பிடிக்க முடியாத கனவுதான். இத்தகையை சூழலில், ஒன்பதாம் வகுப்பில் தனது பார்வையை இழந்த மனு கார்க் (23) என்ற இளைஞர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று அசாத்திய சாதனை படைத்துள்ளார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் 23 வயதான மனு கார்க். தாயின் அரவணைப்பில்தான் வளர்ந்துள்ளார். சமீபத்தில் முடிவுகள் வெளியான யுபிஎஸ்சி தேர்வில், தேர்ச்சி பெற்று, தேசிய அளவில் 91-வது இடத்தைப் பெற்றார். இந்து கல்லூரியில் இளங்கலை படித்த அவர், ஜேஎன்யூ-வில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow