இரவில் உபேர் ஓட்டுநராக பணிபுரிந்து ஏழை மாணவிகளின் கல்விக்கு உதவும் தொழிலதிபர்
இந்திய தொழிலதிபரான நவ் ஷா அண்மையில் பிஜி நாட்டுக்குச் சென்றுள்ளார்.

புதுடெல்லி: இந்திய தொழிலதிபரான நவ் ஷா அண்மையில் பிஜி நாட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது உபேர் நிறுவனத்தின் ஒரு வாடகை காரில் ஏறினார். அந்தக் காரை 86 வயதான முதியவர் ஓட்டிச் சென்றார். அப்போது அவரிடம் ஓட்டுநர் பணியில் கிடைக்கும் சம்பளம் போதுமானதா என்று கேட்டுள்ளார்.
அப்போது அவர் கூறியது, தொழிலதிபருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் சாதாரண ஓட்டுநர் அல்ல. பிஜி நாட்டிலுள்ள மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவர். அவரது நிறுவனம் ஆண்டுதோறும் ரூ.1,500 கோடி வர்த்தகத்தை நடத்தி வருவது தெரியவந்தது. அவரது பூர்வீகம் இந்தியா என்பதும் தெரியவந்தது.
What's Your Reaction?