மகனின் முதல் சம்பளத்தை வாங்கிய பெற்றோர் மகிழ்ச்சி: சமூக ஊடகத்தில் வீடியோ வைரல்

இளைஞர் ஒருவர் தனது முதல் சம்​பளத்தை பெற்​றோரிடம் கொடுத்த பிறகு அவர்​களின் முகத்​தில் ஏற்​பட்ட மகிழ்ச்​சியை படம் பிடித்து ‘எக்​ஸ்' தளத்​தில் பகிர்ந்து கொண்​டுள்​ளார்.

Nov 6, 2025 - 08:45
 0  4
மகனின் முதல் சம்பளத்தை வாங்கிய பெற்றோர் மகிழ்ச்சி: சமூக ஊடகத்தில் வீடியோ வைரல்

புதுடெல்லி: இளைஞர் ஒருவர் தனது முதல் சம்​பளத்தை பெற்​றோரிடம் கொடுத்த பிறகு அவர்​களின் முகத்​தில் ஏற்​பட்ட மகிழ்ச்​சியை படம் பிடித்து ‘எக்​ஸ்' தளத்​தில் பகிர்ந்து கொண்​டுள்​ளார். டெல்லி அருகே காஜி​யா​பாத்தை சேர்ந்த ஆயுஷ்​மான் சிங் என்ற அந்த இளைஞர் அந்த வீடியோவுக்கு ‘முதல் சம்​பளம், நேரடி​யாக பெற்​றோருக்​கு...' என்று தலைப்​பிட்​டுள்​ளார்.

அந்த வீடியோ பதி​வில், ஆயுஷ்​மான் சிங் தனது தாயை​யும் தந்​தையை​யும் ஒன்​றாக உட்​காரச் சொல்லி கண்​களை மூடு​மாறு கூறுகிறார். பிறகு தனது சம்பள கவரை அவர்​கள் கைகளில் கொடுத்து கண்​களை திறந்து பார்க்​கு​மாறு கூறுகிறார். கவரில் ரூ.500 நோட்​டு​களை பார்த்த அவரது தாய் ‘வாவ்! என்ன இது..' என்று மிக​வும் ஆச்​சரியப்​படு​கிறார். இதற்​கு, ‘எனது முதல் சம்​பளம்' என ஆயுஷ்​மான் பதில் அளிக்​கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow