சைக்கிள் மெக்கானிக் மகன் இக்பால் யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த உத்வேகக் கதை!
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் (2024) இறுதி முடிவுகள் ஏப். 22 வெளியிடப்பட்டுள்ளன. இதில் பலதரப்பட்ட விளிம்பு நிலை மாணவர்களின் கண்ணீர் கதைகள் அடங்கியுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் (2024) இறுதி முடிவுகள் ஏப்.22-ல் வெளியிடப்பட்டுள்ளன. இதில் பலதரப்பட்ட விளிம்பு நிலை நபர்களின் உத்வேகக் கதைகள் அடங்கியுள்ளன. வெறுமனே அவர்கள் இந்தத் தேர்வுகளில் எளிதில் தேர்ச்சி பெற்று தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துவிடுவதில்லை. எத்தனையோ கண்விழித்து படித்த தூங்கா இரவுகள், பெற்றோரின் தியாகங்கள், சாதிக்க வேண்டும் என்கிற தீர்மானம், வீட்டின் வறிய நிலையை மாற்றியாக வேண்டிய கட்டாயம் என பலதரப்பட்ட நிர்பந்தங்களுக்கு மத்தியில் ஓடுபவர்கள்தான். அப்படிப்பட்ட ஒரு மாணவரின் உத்வேகக் கதை இது...
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் எளிதல்ல. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்களது கனவுகளை நனவாக உழைத்து கொண்டுதான் வருகிறார்கள். அந்த வகையில், நம்மை ஈர்த்தவர்களில் ஒருவர்தான் உத்தரப் பிரதேச மாநிலம் நந்தூர் நகரத்தைச் சேர்ந்த இக்பால் அகமது. 2024 யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் 998-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
What's Your Reaction?