தமிழகத்தில் 50 சித்த மருத்துவமனைகளில் ‘மஸ்குலோ ஸ்கெலிட்டல்’ சிகிச்சைப் பிரிவு - செயல்படுவது எப்படி?
தமிழகத்தில் உள்ள சித்த மருத்துவமனைகளில் 50 இடங்களில், முடக்கு வாதம், மூட்டு வலி, தூக்கமின்மை, மன அழுத்தம் உள்ளிட்டவற்றுக்கு பாரம்பரிய தசைக்கூட்டு மற்றும் எலும்புக்கூட்டு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும், வீடு மற்றும் பள்ளிகளுக்கு நேரில் சென்று முதியோர், மாணவர் உள்ளிட்டோருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம்: தமிழகத்தில் உள்ள சித்த மருத்துவமனைகளில் 50 இடங்களில், முடக்கு வாதம், மூட்டு வலி, தூக்கமின்மை, மன அழுத்தம் உள்ளிட்டவற்றுக்கு பாரம்பரிய தசைக்கூட்டு மற்றும் எலும்புக்கூட்டு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும், வீடு மற்றும் பள்ளிகளுக்கு நேரில் சென்று முதியோர், மாணவர் உள்ளிட்டோருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 1,700 இடங்களில் அரசு சித்த மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் ஆயுஷ் மருத்துவத் துறை மூலம் 50 சித்த மருத்துவமனைகளில், பாரம்பரிய முறையில் சிகிச்சை அளிக்கும் பிரிவு தொடங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
What's Your Reaction?