கலாம்: எளிமையின் அடையாளம்!
‘ஏவுகணை மனிதர்’ என அழைக்கப்படும் அப்துல் கலாம், இந்தியாவின் மிகப் பெரும் ஆளுமையாக நினைவுகூரப்படுவதற்கு அவரின் கீழ்க்காணும் பண்புகளே காரணம்.

விஞ்ஞானி, குடியரசுத் தலைவராக மட்டுமல்லாமல் தனிப்பட்ட பண்பு களுக்காகவும் கொண்டாடப்பட்ட இந்தியத் தலைவர்களில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் முக்கியமானவர். ‘ஏவுகணை மனிதர்’ என அழைக்கப்படும் அப்துல் கலாம், இந்தியாவின் மிகப் பெரும் ஆளுமையாக நினைவுகூரப்படுவதற்கு அவரின் கீழ்க்காணும் பண்புகளே காரணம்.
தொலைநோக்குப் பார்வை: கலாம் இந்தியாவை 2020ஆம் ஆண்டுக் குள் ஒரு வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என்கிற தொலைநோக்குப் பார்வையை முன்வைத்தார்; இதற்கென ‘இந்தியா 2020’ என்கிற திட்டத்தை உருவாக்கினார். கலாமின் ‘India 2020: A Vision for the New Millennium’ புத்தகத்தில் விவசாயம், தொழில் நுட்பம், கல்வி, உள்கட்டமைப்பு மேம்பாடு மூலம் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான திட்டங்களை விவரித்தார்.
What's Your Reaction?