உலக தியான தினத்தை முன்னிட்டு டிச. 20ல் ஐநா சபையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உரை

உலக தியான தினத்தை முன்னிட்டு, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஐக்கிய நாடுகள் சபையில் டிச.20ம் தேதி, “உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்கான தியானம்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து டிச.21ம் தேதியன்று உலகளாவிய நேரடி தியானம் நடைபெறவுள்ளது.

Dec 18, 2024 - 18:25
 0  5
உலக தியான தினத்தை முன்னிட்டு டிச. 20ல் ஐநா சபையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உரை

சென்னை: உலக தியான தினத்தை முன்னிட்டு, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஐக்கிய நாடுகள் சபையில் டிச.20ம் தேதி, “உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்கான தியானம்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து டிச.21ம் தேதியன்று உலகளாவிய நேரடி தியானம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக வாழும் கலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானத்தின் படி, டிசம்பர் 21ம் தேதி உலக தியான தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி உலக ஆன்மிகத் தலைவரும் மனிதாபிமானத்துறையின் முன்னோடியுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், டிசம்பர் 21-ம் தேதியன்று உலக தியானத்துக்கு வழிகாட்டுகிறார். இந்த வரலாற்று நிகழ்வு தியானத்தின் மெய்யான நன்மைகளை அங்கீகரிப்பதோடு, ஆண்டுதோறும் கொண்டாடும் நிகழ்வாக மாறுகிறது. இது உடல் ஆரோக்கியத்துக்கும், மனநலனுக்கும், மாற்றத்துக்கும், அமைதி மற்றும் ஒற்றுமையையை மேம்படுத்துவதில் தியானத்தின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow