உணவு சுற்றுலா: அரக்குப் பள்ளத்தாக்கின் மூங்கில் பிரியாணி
ஆந்திர மாநிலத்தின் சிறப்பு உணவு வகைகளைப் பட்டியலிட்டால் முன்பெல்லாம் ஹைதரபாத் பிரியாணி முன்வரிசையில் நிற்கும்.

ஆந்திர மாநிலத்தின் சிறப்பு உணவு வகைகளைப் பட்டியலிட்டால் முன்பெல்லாம் ஹைதரபாத் பிரியாணி முன்வரிசையில் நிற்கும். இப்போது ஹைதரபாத் தெலங்கானாவுக்குள் சென்றுவிட, ஆந்திராவுக்கு என இருந்த உணவுத் தனித்துவம் கொஞ்சம் குறைந்துவிட்டதாகப் பலரும் நினைக்கலாம். ஆனால், ஆந்திர மாநிலத்தில் உள்ள அரக்குப் பள்ளத்தாக்கில் தனித்துவமாகத் தயாரிக்கப்படும் ‘மூங்கில் பிரியாணி’ இப்போதும் ஆந்திராவுக்கான சிறப்பு உணவுதான்!
தற்போது அனைத்துப் பகுதிகளிலும் மூங்கில் பிரியாணியைச் சுவைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் அரக்குப் பள்ளத்தாக்கில் வசிக்கும் பழங்குடி மக்களால் சமைக்கப்படும் மூங்கில் பிரியாணியின் தயாரிப்பு முறையும் சுவையும் தனித்துவமானவை. காடுகளில் கிடைக்கும் மூங்கில்களின் துணையுடன் பாரம்பரிய மசாலா கலவை சேர்த்து அங்கு பிரியாணி சமைக்கப்படுகிறது. மூங்கில் பிரியாணியைச் சுவைப்பதற்கு முன்பு, அதைத் தயாரிக்கும் நயத்தை அருகிலிருந்து கவனித்தால், மூங்கில் பிரியாணிக்கு அடிமையாகிப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
What's Your Reaction?