தனுசு ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்கள் முழுமையாக!

குருவை ராசிநாதனாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே! இந்த ஆண்டு ஏற்ற இறக்கமாக பொருளாதாரத்தில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக விலகும். புதிய தொழில்களில் கால்பதிக்க போராடிக் கொண்டிருந்தவர்கள் எதிர்பார்த்த மாற்றத்தைக் காண்பார்கள்.

Dec 18, 2024 - 18:20
 0  5
தனுசு ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்கள் முழுமையாக!

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) குருவை ராசிநாதனாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே! இந்த ஆண்டு ஏற்ற இறக்கமாக பொருளாதாரத்தில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக விலகும். புதிய தொழில்களில் கால்பதிக்க போராடிக் கொண்டிருந்தவர்கள் எதிர்பார்த்த மாற்றத்தைக் காண்பார்கள். நண்பர்களுடன் இருந்த பிரச்சினைகள் தீர்வுக்கு வருவதால் அலுவலகச் சூழல்களில் இருந்த இறுக்கம் மறைந்து சகஜ நிலை உருவாகும்.

உங்களின் தகுதிக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். யோகா, பிராணாயாமம் போன்றவற்றை செய்து உடல் நலத்தையும், மனவளத்தையும் பெருக்கிக்கொள்வீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் திறமைசாலிகளை தங்கள் அருகில் வைத்துக் கொண்டு காரியமாற்றி நலமடைவார்கள். வழக்கு விவகாரங்களில் நிதானமாகவும், விட்டுக்கொடுத்தும் நடந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow