கடகம் ராசிக்கு சனிப் பெயர்ச்சி எப்படி? - பலன்களும் பரிகாரமும்

கடகம் ராசிக்கு சனிப்பெயர்ச்சி எப்படி?: பலன்களும் பரிகாரமும்

Mar 27, 2025 - 18:05
 0  20
கடகம் ராசிக்கு சனிப் பெயர்ச்சி எப்படி? - பலன்களும் பரிகாரமும்

கடகம்: எடுத்த காரியத்தை உண்ணாமல் உறங்காமல் முடிக்கும் வல்லமை கொண்ட நீங்கள் காசு பணத்துக்காக கவுரவத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் 9-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்வதால் இனி எல்லாவற்றிலும் முன்னிலை வகிப்பீர்கள்.

சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மனதுக்குள் துளிர்விடும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சொந்த வீடு வாங்குவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். நீண்ட காலமாக இருந்துவந்த பங்காளிப் பிரச்சினை தீரும். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow