கலாமின் எழுத்து உலகம்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், ‘ஏவுகணை நாயகர்’ என்கிற பெருமைக்குச் சொந்தக்காரரான அப்துல் கலாம் ஒரு சிறந்த எழுத்தாளரும்கூட. இளைய தலைமுறையைக் கனவு காணச் சொன்ன அவரின் எழுத்துகள் இன்றும் பலருக்கு உத்வேகம் தருவதாக இருக்கின்றன.

Jul 25, 2025 - 20:50
 0  4
கலாமின் எழுத்து உலகம்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், ‘ஏவுகணை நாயகர்’ என்கிற பெருமைக்குச் சொந்தக்காரரான அப்துல் கலாம் ஒரு சிறந்த எழுத்தாளரும்கூட. இளைய தலைமுறையைக் கனவு காணச் சொன்ன அவரின் எழுத்துகள் இன்றும் பலருக்கு உத்வேகம் தருவதாக இருக்கின்றன. அறிவியல், கல்வி, தேச முன்னேற்றம், எதிர்காலக் கனவு போன்ற தலைப்புகளில் வெளியாகியுள்ள சுமார் 25 புத்தகங்களை அவர் தனியாகவும், பிற எழுத்தாளர்களோடு சேர்ந்தும் எழுதியுள்ளார்.

வாசிப்பும் எழுத்தும்: தீவிர வாசிப்புப் பழக்கம் கொண்ட கலாம் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் சிறப்பாக எழுதக்கூடியவர். எளிமையான நடையில் இளம் வாசகர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அவரின் எழுத்துகள் இருப்பது தனிச் சிறப்பு. ‘ஒரு சிறந்த புத்தகம் நூறு நண்பர்களுக்குச் சமம், ஒரு சிறந்த நண்பர் ஒரு நூலகத்துக்குச் சமம்’ என்றார் கலாம். தனது வாழ்நாளில் தீவிர வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டிருந்த அவர், மாணவர்களையும் அதிகம் வாசிக்கத் தூண்டினார், வாசிப்பையும் அறிவை மேம்படுத்திக் கொள்வதைப் பற்றியும் தொடர்ந்து பேசினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow