மகா தீபத்தை ஏற்றும் பருவத ராஜகுல வம்சத்தினர் | தி.மலை தீபத் திருவிழா

2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபத்தை பருவத ராஜகுல வம்சத்தினர் ஆண்டாண்டு கால மாக ஏற்றி வருகின்றனர்.  

Dec 13, 2024 - 15:50
 0  4
மகா தீபத்தை ஏற்றும் பருவத ராஜகுல வம்சத்தினர் | தி.மலை தீபத் திருவிழா

அண்ணாமலை உச்சியில் மகா தீபத்தை ஏற்ற சிவபெருமானிடம் வரம் பெற்ற பருவத ராஜகுலத்தினர் மீன மகரிஷியின் சாபத்தில் இருந்து விடுபட சிவபெருமான் வரம் அருளியதால் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபத்தை பருவத ராஜகுல வம்சத்தினர் ஆண்டாண்டு கால மாக ஏற்றி வருகின்றனர்.

அக்னி பிழம்பாக 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில், கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் மகா தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து, 11 நாட்களுக்கு மாலை
6 மணிக்கு ஏற்றப்படும் மகா தீபத்தை பக்தர்கள் தரிசிக்கின்றனர். உலகமே வணங்கும் “மகா தீப(ம்)”த்தை, பருவத ராஜ குலவம்சத்தினர் ஏற்றி வருவது சிறப்புக்குரியதாகும். மீன மகரிஷியால் பெற்ற பாவத்தில் இருந்து விடுபட, அண்ணாமலை உச்சியில் மகா தீபத்தை ஏற்றுவதன்மூலம் மோட்சம் பெறுகின்றனர். இதனால், மகா தீபம் “மோட்ச தீபம்” என்றும் அழைக்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow