October: Ten Days That Shook the World - புரட்சியைக் காட்சிப்படுத்திய திரைப்படம் | சினிமாவும் அரசியலும் 3
அக்டோபர் திரைப்படத்திற்குப் பின்னால் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த ரஷ்யாவின் தொழிலாளர்களும். விவசாயிகளும் இருக்கிறார்கள்.

இதுவும் தேசப்பற்று மிகுந்த திரைப்படம்தான். இன்னும்கூட அழுத்திச் சொல்ல வேண்டுமென்றால், இதுதான் தேசப்பற்றுமிக்க உண்மையான திரைப்படம். தேசத்தின் அத்தனை வளங்களையும் சுரண்டிக் கொழுத்து சுகவாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த அரசனை, தேசத்தின் மக்களே தூக்கியெறிந்து தொழிலாளர்கள் தலைமையில், விவசாயிகள் தலைமையில் ஆட்சியை அமைப்பதற்கும், அதற்காகப் புரட்சியில் ஈடுபட்டதற்கும், நினைத்துப் பாருங்கள் தேசத்தின் மீது எவ்வளவு அன்பிருந்திருக்க வேண்டும். அந்தப் புரட்சியைப் பின்னிருந்து இயக்கிய போல்ஷ்விக் கட்சிக்கு தேசத்தின்மீது எவ்வளவு அக்கறை இருந்திருக்க வேண்டும்.
புரட்சி என்பதும் தேசத்தின் மீதான அன்பிலிருந்து புறப்பட்டு வருவதுதான். அப்பேர்ப்பட்ட புரட்சியை, உலகத்திற்கே உதாரணமான புரட்சியை நெருக்கமாக, எதார்த்தமாக காட்சிப்படுத்த முயன்று, வரலாற்றின் பக்கங்களில் அழுத்தமான இடம்பிடித்த திரைப்படம்தான் அக்டோபர்.
What's Your Reaction?