தடம் மாறும் பதின் பருவம் | மனதின் ஓசை 8

மனிதனைச் ‘சமூக விலங்கு’ என்கிறோம். இதன் முழுமையான அர்த்தம் என்னவென் றால் விரும்பியோ விரும்பாமலோ ஒரு மனிதன் சக மனிதனோடு அல்லது மற்ற மனிதக் குழுக்களோடு உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூல மாகவே மனித இனமாகப் பரிணாம வளர்ச்சி அடைய முடிகிறது.

Jan 29, 2025 - 12:45
 0  4
தடம் மாறும் பதின் பருவம் | மனதின் ஓசை 8

மனிதனைச் ‘சமூக விலங்கு’ என்கிறோம். இதன் முழுமையான அர்த்தம் என்னவென் றால் விரும்பியோ விரும்பாமலோ ஒரு மனிதன் சக மனிதனோடு அல்லது மற்ற மனிதக் குழுக்களோடு உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூல மாகவே மனித இனமாகப் பரிணாம வளர்ச்சி அடைய முடிகிறது. இவ்வாறு ஏற்படுத்திக்கொள்ளும் உறவு, தனி மனித விருப்பு வெறுப்புகளைத் தாண்டி புறக் காரணிகள், பொருளாதாரச் சூழ்நிலைகளாலும் தீர்மானிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பதின்பருவத்தில் உறவுகள்: பள்ளிக்குச் செல்லும் பதின் பருவத்தினர் புதிய நபர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அதிகம். அவர்கள் ஆசிரிய ரோடு, நண்பர்களோடு இந்தப் பருவத்தில்தான் சமூக உறவுகளைச் சுயமாக வளர்த்துக்கொள்கின்றனர். ‘Social Relationship’ எனப்படும் இந்தச் சமூக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும்போது சில சிக்கல்கள் எழலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow