உலகப் புகழ் பெற்ற வாத்து! | வரலாறு முக்கியம் மக்களே! - 22

காட்டு வாத்துகள் (Mallard Ducks) பொதுவாக மறைவான இடங்களிலேயே முட்டைகள் இடும். ஆனால், எங்கிருந்தோ வந்த அந்தக் காட்டு வாத்து, அமெரிக்காவின் மில்வாகி நகரத்தின் மையத்தில் உள்ள ஒரு பாலத்தின் கீழே முட்டைகளை இட்டிருந்தது.

Oct 29, 2025 - 15:45
 0  2
உலகப் புகழ் பெற்ற வாத்து! | வரலாறு முக்கியம் மக்களே! - 22

காட்டு வாத்துகள் (Mallard Ducks) பொதுவாக மறைவான இடங்களிலேயே முட்டைகள் இடும். ஆனால், எங்கிருந்தோ வந்த அந்தக் காட்டு வாத்து, அமெரிக்காவின் மில்வாகி நகரத்தின் மையத்தில் உள்ள ஒரு பாலத்தின் கீழே முட்டைகளை இட்டிருந்தது. விஸ்கான்சின் அவென்யு என்கிற அந்தப் பாலத்தின் மீது நின்று வாத்தை வேடிக்கை பார்த்தார்கள் மக்கள். கீழே ஓடும் நதியின் கரையில், கூடு அமைத்து முட்டைகளை அடைகாத்துக் கொண்டிருந்தது அந்த வாத்து.

வாத்து, அதன் முட்டைகள் குறித்த செய்தி, ‘தி மில்வாகி ஜர்னல்’ என்கிற பத்திரிகையில் தினமும் இடம்பெற்றது. கோர்டான் மெக்குவாரி என்கிற பத்திரிகையாளர், ‘கெர்டி’ (Gertie) என்கிற பெயரில் அந்த வாத்தைக் குறிப்பிட்டு, தினமும் செய்திகள் எழுதினார். மக்களும் வாத்து குறித்த செய்திகளை ஆர்வமாகப் படித்தார்கள். அப்போது மில்வாகி மக்கள் இருந்த மனநிலைக்கு அந்த வாத்து, மிகப்பெரிய ஆறுதலைத் தந்துகொண்டிருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow