திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் இன்று காலை தொடங்கியது. கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பந்தல்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கியிருந்து சஷ்டி விரதத்தை தொடங்கினர். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது.

Nov 11, 2024 - 15:43
 0  4
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் இன்று காலை தொடங்கியது. கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பந்தல்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கியிருந்து சஷ்டி விரதத்தை தொடங்கினர். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கியமானது கந்தசஷ்டி விழாவாகும். சூரபத்மனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்த புராணச் சிறப்பு வாய்ந்த தலம் என்பதால் திருச்செந்தூரில் நடைபெறும் கந்தசஷ்டி விழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா இன்று (2-ம் தேதி) தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow