திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்.

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்.
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காலை 7 மணியளவில் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. பின்னர் உற்சவர் சன்னதியிலுள்ள சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. பின்பு சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகர் வள்ளி தெய்வானைக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
What's Your Reaction?