பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றுடன் நேற்று தொடங்கியது.

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றுடன் நேற்று தொடங்கியது. பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
இதையொட்டி, சண்டிகேசுவரர் சந்நிதியில் இருந்து கொடி புறப்பாடாகி, கோயிலை வலம் வந்தது.தொடர்ந்து, கொடி மரம் அருகே உற்சவ விநாயகர், சண்டிகேசுவரர், அங்குசத்தேவர் எழுந்தருளினர். பின்னர், கொடிமரத்துக்கும், மூஞ்சூறு வாகனம் வரையப்பட்ட கொடிப்படத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
What's Your Reaction?