தை அமாவாசை: ராமேசுவரம், ஸ்ரீரங்கம், பவானியில் புனித நீராடி முன்னோருக்கு திதி கொடுத்த மக்கள்
தை அமாவாசையையொட்டி ராமேசுவரம், ஸ்ரீரங்கம், பவானி உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடினர்.

ராமேசுவரம் / திருச்சி / ஈரோடு: தை அமாவாசையையொட்டி ராமேசுவரம், ஸ்ரீரங்கம், பவானி உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடினர்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் நேற்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பகல் 12 மணியளவில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ராமர், சீதா, லட்சுமணர் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கி அருள்பாலித்தனர். மாலையில் மண்டகப்படியில் தீபாராதனை, இரவு கருட வாகனத்தில் சுவாமி, அம்பாள் புறப்பாடு நடைபெற்றது.
What's Your Reaction?