திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் நேற்று முன் தினம் அனுக்ஞை பூஜை,வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றன. கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. மாலையில் தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
What's Your Reaction?