காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதி இன்று பொறுப்பேற்பு
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் இன்று பொறுப்பேற்கிறார்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் இன்று பொறுப்பேற்கிறார்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீ கணேச சர்மா திராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பஞ்சகங்கா தீர்த்த குளத்தில் அட்சய திருதியை தினத்தில் (இன்று) காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சந்நியாஸ்ரம தீட்சை வழங்குகிறார்.
What's Your Reaction?