ஆவணி மூலத் திருவிழா: மீனாட்சி அம்மன் கோயிலில் கருங்குருவிக்கு உபதேசம் திருவிளையாடல் நிகழ்வு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவின் முதல் நாளான இன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளை யாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவின் முதல் நாளான இன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா ஆக.20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆக.25-ம் தேதி சந்திரசேகரர் புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முதல் நாளான இன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடலை முன்னிட்டு தங்கச் சப்பரத்தில் பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஆவணி மூல வீதியில் எழுந்தருளினர். பின்னர் அங்குள்ள குலாலர் மண்டபத்தில் கருங்குருவிக்கு உபதேசித்த திருவிளையாடல் நடைபெற்றது.
What's Your Reaction?