மதுரையில் தெப்பத் திருவிழா கோலாகலம் - மாரியம்மன் தெப்பத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மன், சுந்தரேசுவரர்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தைத் தெப்பத் திருவிழாவின் 12-ம் நாளான இன்று (பிப்.11) வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் மீனாட்சி அம்மன் பிரியாவிடை சுந்தரேசுவரர் எழுந்தருளினர். தெப்பத்தை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தைத் தெப்பத் திருவிழாவின் 12-ம் நாளான இன்று (பிப்.11) வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் மீனாட்சி அம்மன் பிரியாவிடை சுந்தரேசுவரர் எழுந்தருளினர். தெப்பத்தை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தை மாத தெப்பத் திருவிழா ஜன.31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் நான்கு சித்திரை வீதிகளிலும் மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினர். பிப்.9-ம் தேதி தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடந்தது. திருவிழாவின் 11-ம் நாளான (பிப்.10) நேற்று மதுரை சிந்தாமணியில் நடைபெறும் கதிரறுப்பு திருவிழாவை முன்னிட்டு காலையில் தங்கப்பல்லக்கில் சுவாமி, அம்மன் புறப்பாடாகினர்.
What's Your Reaction?