தைப்பூச திருவிழா: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
தைப்பூசத்தை முன்னிட்டு முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

மதுரை: தைப்பூசத்தை முன்னிட்டு முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு இன்று (பிப்.11) அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை முதலே பெருந்திரளாக பக்தர்கள் கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
What's Your Reaction?