அரோகரா கோஷம் அதிர சென்னிமலை முருகன் கோயில் தைப்பூசத் தேரோட்டம் கோலாகலம்!
பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் விண்ணைப் பிளக்க, சென்னிமலை முருகன் கோயில் தைப்பூசத் தேரோட்டம், விமரிசையாக இன்று (பிப்.11) நடந்தது.

ஈரோடு: பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் விண்ணைப் பிளக்க, சென்னிமலை முருகன் கோயில் தைப்பூசத் தேரோட்டம், விமரிசையாக இன்று (பிப்.11) நடந்தது.
கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய பெருமைக்குரிய சென்னிமலை முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா, கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் இரவு பல்லக்கு சேவை, மயில் வாகன காட்சி, பஞ்ச மூர்த்தி புறப்பாடு வெள்ளி மயில் வாகன காட்சி, யானை வாகன காட்சி ஆகிய நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தன. இந்நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 9-ம் தேதி மாலையில் கைலயங்கிரி வாகன காட்சியும், இரவு காமதேனு வாகன காட்சியும் நடைபெற்றது.
What's Your Reaction?