சென்னை, புறநகர் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா: அரோகரா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

கந்த சஷ்டி விழாவையொட்டி, சென்னை மற்றும் புறநகரில் உள்ள முருகன் கோயில்களில் சூரசம்ஹார நிகழ்வு நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

Nov 11, 2024 - 15:43
 0  3
சென்னை, புறநகர் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா: அரோகரா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

சென்னை: கந்த சஷ்டி விழாவையொட்டி, சென்னை மற்றும் புறநகரில் உள்ள முருகன் கோயில்களில் சூரசம்ஹார நிகழ்வு நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். சென்னை வடபழனி முருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி விழா கடந்த 1-ம் தேதி விநாயகரின் மூஷிக வாகன புறப்பாட்டுடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நாளான நேற்று உச்சி காலத்துடன் லட்சார்ச்சனை நிறைவு பெற்றது. தொடர்ந்து தீர்த்தவாரி, கலாசாபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு அம்பாளிடம் வேல் பெற்று, சூரபத்மனை வதம் செய்ய முருகப் பெருமான் புறப் பட்டார். நேற்று இரவு 8 மணிக்கு சூர சம்ஹாரம் தொடங்கியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow