ஆடி கிருத்திகையை ஒட்டி வடபழனி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
மற்ற மாதங்களில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தை விட, ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் விசேஷமானது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் ஜூலை 20-ம் தேதி, ஆக. 16-ம் தேதி என 2 முறை கிருத்திகை நட்சத்திரம் வருகிறது.

சென்னை: ஆடிக் கிருத்திகையை ஒட்டி, வடபழனி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். மற்ற மாதங்களில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தை விட, ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் விசேஷமானது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் ஜூலை 20-ம் தேதி, ஆக. 16-ம் தேதி என 2 முறை கிருத்திகை நட்சத்திரம் வருகிறது.
அந்த வகையில், முதல் ஆடிக் கிருத்திகை நாளான நேற்று அனைத்து முருகன் கோயில்களும் விழாக்கோலம் பூண்டிருந்தன. சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதனால் அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
What's Your Reaction?