எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லரு'க்கு ஜெர்மனியில் இருந்து வந்த கார்
இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, கடந்த சில வருடங்களாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, கடந்த சில வருடங்களாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
இப்போது, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, சர்தார் 2 உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் படம் இயக்குகிறார். முன்னதாக 'இசை' படத்தை தயாரித்து, இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2015 -ம் ஆண்டு வெளியாகி இருந்தது.
இப்போது அவர் இயக்கும் படத்துக்கு 'கில்லர்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் பிரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார். கோகுலம் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏஞ்சல் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.
What's Your Reaction?