ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவுக்கு பந்தல்கால்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

Nov 15, 2024 - 04:05
 0  6
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவுக்கு பந்தல்கால்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா டிச .30-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, 2025 ஜன. 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வரும் டிச. 31-ம் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. ஜன. 9-ம் தேதி மோகினி அலங்காரம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு விழா ஜன. 10-ம் தேதி நடைபெற உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow