கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூச தேரோட்டம்: வடம் பிடித்து தேர் இழுத்த பக்தர்கள்

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் தைப்பூச திருவிழாவில் தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

Feb 11, 2025 - 13:20
 0  3
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூச தேரோட்டம்: வடம் பிடித்து தேர் இழுத்த பக்தர்கள்

கோவில்பட்டி: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் தைப்பூச திருவிழாவில் தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தென்பழநி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கடந்த 2-ம் தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை மற்றும் கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை, சோமாஸ் கந்தர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார மகா தீபாராதனை நடந்து வருகிறது. ஒவ்வொரு நாள் இரவும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow