சபரிமலை சிறப்பு தரிசன திட்டத்தில் குளறுபடி: தேவசம் போர்டு மீது பக்தர்கள் குற்றச்சாட்டு
சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய பாரம்பரிய வனப்பாதை வழியாக யாத்திரை சென்ற பக்தர்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமைக்கான சிறப்பு தரிசன திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு, திட்டத்தை செயல்படுத்தியதில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என தேவசம்போர்டு போர்டு மீது பக்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருவண்ணாமலை: சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய பாரம்பரிய வனப்பாதை வழியாக யாத்திரை சென்ற பக்தர்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமைக்கான சிறப்பு தரிசன திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு, திட்டத்தை செயல்படுத்தியதில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என தேவசம்போர்டு போர்டு மீது பக்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவு பெற்று, மகர விளக்கு பூஜைக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வனப்பாதை(பெரு வழி பாதை) வழியாக வரும் பக்தர்களுக்கு, சுவாமி தரிசனம் செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதற்கான “சிறப்பு தரிசனம்” திட்டத்தை தேவசம்போர்டு கடந்த டிசம்பர் 18-ம் தேதி தேவசம்போர்டு அறிவித்தது.
What's Your Reaction?