‘கேம் சேஞ்சர்’ ட்ரெய்லர் எப்படி? - மீண்டும் கம்பேக் தருவாரா ஷங்கர்!
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’.

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைப்பாளராகவும், திரு ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர். ஜனவரி 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - ‘இந்தியன் 2’ பெற்ற மோசமான வரவேற்புக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம். ‘இந்தியன் 2’ படம் உருவாகிக் கொண்டிருந்த போதே இந்த படத்திலும் ஷங்கர் கவனம் செலுத்தி வந்தார். ‘முதல்வன்’, ‘சிவாஜி’-க்கு பிறகு ஷங்கரின் அக்மார்க் பாணியிலான சமூகம் + அரசியல் கருத்துகளைக் கொண்ட முழுமையான படமாக ‘கேம் சேஞ்சர்’ இருக்கும் என்பதை ட்ரெய்லரிலேயே உணர முடிகிறது.
What's Your Reaction?