தைப்பூச திருவிழா: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த தமிழக, ஆந்திர பக்தர்கள்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருத்தணி: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் திருத்தணியில் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று (பிப்.11) அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, தங்க கவசம், வைரகிரீடம், பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணியளவில் காவடி மண்டபத்தில் உற்சவர் முருகனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
What's Your Reaction?