மண்டையோடு எங்கே? - ஜெர்மன் இயக்குநர் முர்னா | கல்லறைக் கதைகள் 13
கல்லறையில் இருந்து முர்னாவின் உடலைத் தோண்டி எடுத்துக் கடத்திச் செல்ல பலமுறை முயற்சி நடந்திருக்கிறது. அவரது தலையை மட்டும் துண்டித்து எடுத்துச் சென்றுவிட்டனர் என்று அவரைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்த ஸ்டீபனி பப்பாஸ் என்கிற அறிவியல் ஆய்வாளர் கூறினார்.

ஜெர்மன் இயக்குநர் முர்னா, கார்ல் மேயர் எழுதிய, ‘தி லாஸ்ட் லாஃப்’ எனும் திரைப்படத்தை 1924ஆம் ஆண்டு எடுத்தார். கதையைப் படமாக்கியபோது கதாபாத்திரங்களின் பார்வையில் எல்லாவற்றையும் பார்ப்பது போல கேமரா மூலமாக எல்லாவற்றையும் படம் பிடித்தார். அதாவது, கதாப்பாத்திரங்களின் உள்ளுணர்வை வெளிப்படுத்தும் பாணியைப் பின்பற்றினார்.
அதுமட்டுமல்லாமல், படக்காட்சிகளை ஒரு சங்கிலித் தொடர்போலப் படம் பிடிக்கும் உத்தியைப் பின்பற்றினார். இது அந்தக் காலத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவற்றுக்குக் கிடைத்த அங்கீகாரம் முர்னாவுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்தப் படம் அன்றைய காலக்கட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவந்த, எக்ஸிஃபிசனிஸ்ட் கொள்கைக்கு முற்றிலும் மாறான வகையில் படமாக்கப்பட்டது. இது முர்னாவின் பிற திரைப்படங்களில் இருந்து மாறுபட்ட வகையிலும் இருந்தது என்றே கூறலாம்.
What's Your Reaction?