அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் | விஞ்ஞானிகள் - 8
1921இல் திசுக்களிலும் அதன் சுரப்பிகளிலும் ஒரு முக்கியமான பாக்டீரியோலிடிக் பொருள் இருப்பதைக் கண்டறிந்தார். அதற்கு ’லைசோசைம்’ என்று பெயரிட்டார். பென்சிலினுக்கு முன்பாக உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு நுண்ணுயிரி இருப்பதைக் கண்டறிந்தார்.

மருத்துவத்தில் பென்சிலின் என்கிற எதிர் நுண்ணுயிரி கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால், உலகின் மக்கள்தொகை பாதியாக இருந்திருக்கும். 1881, ஆகஸ்ட் 6 அன்று ஸ்காட்லாந்தில் பிறந்தார் அலெக்சாண்டர் ஃப்ளெமிங். பாலிடெக்னிக் முடித்ததும் கப்பல் அலுவலகத்தில் நான்கு ஆண்டுகள் வேலை பார்த்தார். அதன் பிறகு மருத்துவராகும் கனவோடு லண்டனில் உள்ள செயின்ட் மேரிஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.
தடுப்பூசி சிகிச்சையின் முன்னோடி சர் ஆம்ரைட் என்கிற பேராசிரியரிடம் படித்தார். படிப்பு முடித்து அவரிடமே உதவியாளராகச் சேர்ந்தார். ஆசிரியரைப் போலவே தானும் எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்கிற வேட்கையோடு பாக்டீரியாவை ஆராய்ச்சி செய்தார். நுண்ணுயிரியல் வல்லுநர் ஆனார்.
What's Your Reaction?