மழை, பனியால் திராட்சை விற்பனை சரிவு: தேனி விவசாயிகள் பாதிப்பு
தொடர் மழை, பனியினால் தற்போது குளிர்பருவநிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் திராட்சை நுகர்வுத்தன்மை குறைந்து விலை வெகுவாய் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கம்பம்: தொடர் மழை, பனியினால் தற்போது குளிர்பருவநிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் திராட்சை நுகர்வுத்தன்மை குறைந்து விலை வெகுவாய் வீழ்ச்சி அடைந்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னீர் திராட்சை விவசாயம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, சின்னமனூர், ஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திராட்சை அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. இங்கு விளையும் திராட்சைகள் சென்னை, சேலம், திருச்சி, கோட்டயம், சங்கனாச்சேரி, எர்ணாகுளம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சந்தைப்படுத்தப்படுகிறது.
What's Your Reaction?