Su From So: திரைப் பார்வை -அப்பாவி கிராமமும் அட்டகாச ஆவியும்!
ரத்தமும் வன்முறையும் நிறைந்த மாஸ் திரைப்படக் கலாச்சாரம் பெரும் விஷமாக மாறிவிட்ட தற்போதைய சூழலில், ஒரு மெல்லிய காதல் கதை அல்லது ஒரு முழு நீள நகைச்சுவைக் கதை தரமான பொழுதுபோக்குப் படமாக வருவது மிகவும் குறைந்துவிட்டது.

“குடும்பத்துடன் பார்க்கலாமா?” - திரையரங்கு போய் ரூபாய் 2 ஆயிரம் செலவழிக்கச் சக்தியுள்ள, சற்று மூத்த ரசிகர்கள் கேட்கும் முக்கியமான கேள்வி இது. ரத்தமும் வன்முறையும் நிறைந்த மாஸ் திரைப்படக் கலாச்சாரம் பெரும் விஷமாக மாறிவிட்ட தற்போதைய சூழலில், ஒரு மெல்லிய காதல் கதை அல்லது ஒரு முழு நீள நகைச்சுவைக் கதை தரமான பொழுதுபோக்குப் படமாக வருவது மிகவும் குறைந்துவிட்டது.
அந்தக் குறையைப் போக்கிடும் வகையில், குடும்பமாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டாடக் கூடிய ஒரு கிராமத்து நகைச்சுவை விருந்துதான், கன்னடத்தில் வெளியாகி தற்போது கர்நாடகத்தைத் தெறிக்கவிட்டிருக்கும் ‘சு ஃப்ரம் சோ’ (சுலோச்சனா ஃபிரம் சோமேஷ்வரா).
What's Your Reaction?