ஏழாவது மலையில் குடிகொண்டிருக்கும் வெள்ளியங்கிரி ஈசன்
வெள்ளியங்கிரியில் ஏழு மலைகள் உள்ளன. மொத்த பயண தூரம் 6 கி.மீ. ஆகும். கரடு முரடான பாறைகள் மற்றும் செங்குத்தான மலைப் பாதைகளை கடந்து வெள்ளியங்கிரி மலை உச்சியை அடைந்து, வெள்ளியங்கிரி ஈசனை வழிபடலாம்.

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரியில் ஏழு மலைகள் உள்ளன. மொத்த பயண தூரம் 6 கி.மீ. ஆகும். கரடு முரடான பாறைகள் மற்றும் செங்குத்தான மலைப் பாதைகளை கடந்து வெள்ளியங்கிரி மலை உச்சியை அடைந்து, வெள்ளியங்கிரி ஈசனை வழிபடலாம்.
முதல் மலை: முதல் மலையில் அமைந்துள்ள பாதை முழுவதும் சீரான படிகள் என்றாலும், படியின் உயரம் முக்கால் முதல் 1 அடி வரை செங்குத்தானவை. இரவில் நிலா வெளிச்சம் இருந்தாலும், அடர்ந்த சோலைகளின் நடுவே பயணிக்கும்போது, இருட்டாகத்தான் இருக்கும். இம் மலையில் மூங்கில், தேக்கு, வேங்கை மற்றும் மூலிகைச் செடிகள், மரங்கள் அதிக அளவில் உள்ளன. மலை ஏறத் தொடங்கும்போது, லேசாக வியர்க்கத் தொடங்கி பாதி மலைக்கு மேல் பயணிக்கும்போது அந்த இரவு நேரத்திலும் வியர்த்து கொட்டும். மலை ஏறும்போது ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டு சென்றால், எந்தவித சலிப்பும் தெரிவதில்லை. ஏழு மலைகளில் முதல் மலை அதிக உயரம். சுமார் ஒன்றரை கி.மீ. இருக்கும். முதல் மலை முடிந்து இரண்டாவது மலை தொடக்கத்தில் வெள்ளை விநாயகர் சந்நிதி உள்ளது.
What's Your Reaction?