ஒரு ஜப்பானியக் கனவு! | தேன் மிட்டாய் 33
எந்தக் கனவும் வரலாமா என்று நம்மிடம் அனுமதி கேட்டுக்கொண்டு தோன்றுவது இல்லை. நம் உத்தரவைக் கேட்டுக் கொண்டு கிளம்புவதும் இல்லை. அதுவாகவே வருகிறது. அதுவாகவே விலகுகிறது. எனக்குள் அப்படி ஒரு கனவு என் அனுமதி கேட்காமல் ஒரு நாள் தோன்றிவிட்டது.

எந்தக் கனவும் வரலாமா என்று நம்மிடம் அனுமதி கேட்டுக்கொண்டு தோன்றுவது இல்லை. நம் உத்தரவைக் கேட்டுக் கொண்டு கிளம்புவதும் இல்லை. அதுவாகவே வருகிறது. அதுவாகவே விலகுகிறது. எனக்குள் அப்படி ஒரு கனவு என் அனுமதி கேட்காமல் ஒரு நாள் தோன்றிவிட்டது. கிளம்பிவிடு என்று நான் கெஞ்சிக் கேட்டுக் கொண்ட பிறகும் மாட்டேன் என்று விடாப்பிடியாகக் கட்டிப்பிடித்துக் கொண்டு விட்டது. அதன் தீவிரத்தைக் கண்டதும் நானும் ஒரு முடிவெடுத்துவிட்டேன். என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். யாரும் எதுவும் சொல்லட்டும். என் கனவை இறுதிவரை கைவிடமாட்டேன்.
அப்படி என்ன கனவு என்கிறீர்களா? என் தாய்நாடான ஜப்பானுக்கு என் விரல்களால் ஒரு வரைபடத்தை உருவாக்க வேண்டும். அவ்வளவுதான். எப்படிச் செய்யப் போகிறேன்? தெரியாது. எந்தப் பெரிய பின்புலமும் இல்லாத என்னைப் போன்ற ஒரு தனி மனிதனால் இதைச் சாத்தியப்படுத்த முடியுமா? தெரியாது. என் வாழ்நாளுக்குள் இதை என்னால் நிறைவேற்ற முடியுமா? தெரியாது. அப்படியே செய்து முடித்தாலும் அதனால் எனக்கு என்ன பலன்? தெரியாது.
What's Your Reaction?