Stolen - போலிச் செய்தியால் திருடப்பட்டவர்கள்! | ஓடிடி உலகம்

போலிச் செய்திகளால் மூச்சுத் திணறும் உலகம் இது. அப்படிப்பட்ட செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய யாருக்கும் ஆர்வமில்லை. செய்தி தரும் பரபரப்பு மட்டும் போதும் என்று கடந்துவிடுகிறோம்.

Jun 13, 2025 - 12:45
 0  3
Stolen - போலிச் செய்தியால் திருடப்பட்டவர்கள்! | ஓடிடி உலகம்

போலிச் செய்திகளால் மூச்சுத் திணறும் உலகம் இது. அப்படிப்பட்ட செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய யாருக்கும் ஆர்வமில்லை. செய்தி தரும் பரபரப்பு மட்டும் போதும் என்று கடந்துவிடுகிறோம். ஆனால், அது போன்ற செய்திகளால் என்னவெல்லாம் நடக்கலாம் என்பதை, 2018இல் அசாமில் இரண்டு இளைஞர்களுக்கு நடந்த மோசமான நிகழ்வொன்றை மையமாக வைத்து உருவான படம்தான் அமேசான் தளத்தில் வெளியாகியிருக்கும் இந்தி மொழிப் படமான ‘ஸ்டோலன்’.

ராஜஸ்தானில் எங்கோ ஒரு தொலை தூரப் பகுதியில் உள்ள ரயில் நிலையத் தில் ஓர் இளம் தாய் தன்னுடைய 5 மாதக் கைக்குழந்தையுடன் கண்ணயர்ந்து விடுகிறாள். அப்போது அக்குழந்தை திருடப்படுகிறது. அந்நேரத்தில் தற்செயலாக அங்கே வரும் இரண்டு சகோதரர்கள் அக்குற்றத்தைச் செய்யாமலேயே அதில் சிக்கிக்கொள்கிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow