காதலின் எதிர்பாரா ‘தருணம்’ | இயக்குநரின் குரல்
வெற்றிப்பட இயக்குநர்களாக ஒளிரும் பத்திரிகையாளர்களின் வரிசையில், அருள்நிதி நடித்த ‘தேஜாவு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் அரவிந்த் ஸ்ரீநிவாசன். அவரின் இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் படம் ‘தருணம்’.

வெற்றிப்பட இயக்குநர்களாக ஒளிரும் பத்திரிகையாளர்களின் வரிசையில், அருள்நிதி நடித்த ‘தேஜாவு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் அரவிந்த் ஸ்ரீநிவாசன். அவரின் இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் படம் ‘தருணம்’. கிஷன் தாஸ் - ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் காதல் - ஆக் ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம், பொங்கல் திருநாளில் ரிலீஸ் ஆகிறது. படம் குறித்து இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
அஜித் - விக்ரம் - ராம் சரண் எனப் பெரிய ஹீரோக்களின் படங்களோடு ‘தருணம்’ படத்தை வெளியிடும் துணிச்சலுக்கான காரணம் என்ன? - பொங்கல் பண்டிகை வெளியீடு எனும்போது நான்கு படங்களுக்கு ‘ஸ்பேஸ்’ இருக்கும் என நம்புகிறேன். ஏனென்றால் குறைந்தது நான்கு நாள் விடுமுறை வரும். படம் பார்த்து பண்டிகையைக் கொண்டாடும் மனநிலை என்பது பொங்கலுக்குச் சற்று அதிகமாகவே இருக்கும்.
What's Your Reaction?