‘அமரன்’ படம் உண்மை சம்பவம் என்பதால் எனது கருத்தை திணிக்க முடியாது: இயக்குநர்

நீலகிரி மாவட்டம் உதகையில் திரையிடப்பட்ட அமரன் திரைப்படத்தை, தங்கள் குடும்பத்தினருடன் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் முன்னேற்ற சங்கத்தினர் நேற்று கண்டு ரசித்தனர்.

Nov 11, 2024 - 17:15
 0  3
‘அமரன்’ படம் உண்மை சம்பவம் என்பதால் எனது கருத்தை திணிக்க முடியாது: இயக்குநர்

உதகை: உண்மை சம்பவத்தை தழுவி அமரன் படம் எடுக்கப்பட்டது என்பதால், எனது சொந்த கருத்தை திணிக்க முடியாது என்று இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் திரையிடப்பட்ட அமரன் திரைப்படத்தை, தங்கள் குடும்பத்தினருடன் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் முன்னேற்ற சங்கத்தினர் நேற்று கண்டு ரசித்தனர். இந்நிலையில், மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் முன்னேற்ற சங்கத்தினரின் அழைப்பின்பேரில், உதகையில் அமரன் படம் திரையிடப்பட்ட திரையரங்குக்கு படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி வந்தார். படத்தை கண்டு ரசித்தவர்களுக்கு நன்றி கூறி கலந்துரையாடினார். அப்போது, நீலகிரி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் முன்னேற்ற சங்க தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள், படுகர் மக்களின் பாரம்பரியப்படி அவருக்கு தலைப்பாகை, சால்வை மற்றும் சந்தன மாலை அணிவித்து வரவேற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow