பாம்பு எப்படித் தகவல் பறிமாறும்?
பாம்புகள் தரையில் தங்கள் உடலைத் தட்டுவதன் மூலம் அதிர்வுகளை உருவாக்கி, மற்ற பாம்புகளுடன் தொடர்புகொள்ளும். இது ஒரு வகையான குறியீட்டு முறையைப் போன்றது. வெவ்வேறு விதமான தட்டல்களும் அழுத்தங்களும் வெவ்வேறு செய்திகளைத் தெரிவிக்கின்றன. பாம்புகள் ஒன்றோடு மற்றொன்று தொடர்புகொள்ள அதிர்வுகளோடு, அவற்றின் பெரோமோன்களும் உதவுகின்றன. இவை மற்ற பாம்புகளுக்குப் பல விதமான தகவல்களைத் தெரிவிக்கின்றன.

உயிரினங்களின் மொழி - 13
பாம்புகளைக் கண்டால் மனிதர்களுக்கு அச்சம். மனிதர்களைக் கண்டால் பாம்புகளுக்கு அச்சம்.
பாம்புகளும் தங்களுக்குள் ஒரு தொடர்பு மொழியை ஏற்படுத்தியுள்ளன. சுற்றி நடப்பதைத் தெரிந்துகொள்ளச் சின்ன சின்ன அதிர்வுகளே பாம்புகளுக்குப் போதுமானதாக உள்ளன. கீழ்த்தாடை எலும்புகள், உடலில் உள்ள உணர்வுப் புள்ளிகள் அதிர்வுகளை உணர்ந்து, அவற்றை மூளைக்கு அனுப்புகின்றன.
What's Your Reaction?