பச்சோந்தி கடித்தால் விஷமா? - டிங்குவிடம் கேளுங்கள்
பொதுவாகப் பச்சோந்தி மிகவும் சாதுவான உயிரினம். மனிதர்களைக் கண்டால், கடந்து செல்லவே விரும்பும். தனக்கு ஏதாவது ஆபத்து என்று நினைக்கும்போதுதான், தன்னைக் காத்துக்கொள்வதற்காகப் பச்சோந்தி கடிக்கிறது.

– சு.ரா. கவின்கிருஷ்ணா, 3-ம் வகுப்பு, கோவில்பட்டி.
பொதுவாகப் பச்சோந்தி மிகவும் சாதுவான உயிரினம். மனிதர்களைக் கண்டால், கடந்து செல்லவே விரும்பும். தனக்கு ஏதாவது ஆபத்து என்று நினைக்கும்போதுதான், தன்னைக் காத்துக்கொள்வதற்காகப் பச்சோந்தி கடிக்கிறது. அதுவும் மனிதரின் கையா, தன்னுடைய எதிரியா என்று அறியாமல் கடிக்கிறது. பச்சோந்தியின் கடி விஷமில்லை. ஆனால், சில நேரம் பச்சோந்தி கடித்து ஆழமான காயம் ஏற்படலாம். ரத்தம் வரலாம். முதலில் பச்சோந்தி வாயிலிருந்து கையை எடுக்க வேண்டும். நீராலும் சோப்பாலும் கடித்த பகுதியைச் சுத்தம் செய்ய வேண்டும். காயம் அதிகமாக இருந்தால் மருத்துவரின் உதவியை நாட வேண்டும், கவின்கிருஷ்ணா.
What's Your Reaction?